தமிழ்நாடு

ராட்சத குடிநீர் குழாய் இணைப்பில் திடீரென உடைப்பு..அதிக அளவில் வெளியேறி வீணான தண்ணீர் | Water Wasting

சென்னை போரூர்  பேருந்து நிலையம் அருகே ராட்சத குடிநீர் குழாய் இணைப்பு உடைக்கப்பட்டு தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. போரூர் பேருந்து நிலையம் அருகே சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான ராட்சத குடிநீர் குழாயின் இணைப்பில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

00 Comments

Leave a comment