சினிமா

கமலின் 'நாயகன்' படம் மீண்டும் ரிலீஸ் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறது படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்

நடிகர் கமலஹாசன் நடித்த  நாயகன் படம், நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஆளவந்தான் படத்தையும் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன், அமலா நடித்து திரைக்கு வந்த பேசும் படம்  டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,

நாயகன் படமும்  இந்த வரிசையில் இணைந்துள்ளது.

படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் திரைக்கு வர உள்ளது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் நாயகன் படம் பெற்றுக்கொடுத்தது  என்பது குறிப்பிடதக்கது. 

00 Comments

Leave a comment