Big Stories

குட்டி ஜானுவின் மாலத்தீவு லூட்டிகள்.. பிகினி உடையில் கிறங்கடிக்கும் காட்சி Gouri G. Kishan

மாலத்தீவுக்கு நண்பர்களுடன் டூர் சென்ற 96 பட குட்டி ஜானு குளியல் உடையில் ஓடிவந்து குதித்த கிளாமர் வீடியோ இன்ஸ்டாவில் வெளியானது. ஆண் நண்பர்களுடன் படுக்கையறையில் குதித்து விளையாடிய கௌரியின் வீடியோவை பார்த்த அவரது பாலோயர்ஸ்கள் ஜானுமா என்ன இது? என கேள்வி எழுப்ப வீடியோவையே டெலிட் செய்துவிட்டார் குட்டி ஜானு.

ஸ்கூல் யூனிபார்ம், ரெட்டை ஜடை, கருப்பு ரிப்பன், தலையில் கதம்ப பூ என பக்கத்து வீட்டு பாப்பா மாதிரி 96 படத்தில் சிறுவயது த்ரிஷாவாக நடித்திருந்த குட்டி ஜானுவின் அழகில் ராம் மட்டும் மயங்கவில்லை.. ஒட்டுமொத்த இளைஞர்கள் டீமே மயங்கியது.. இந்த மயக்கத்தில் இருந்தே இளைஞர்கள் கூட்டம் இன்னும் எழும்பாமல் கிடக்க.. சமீபகாலமாக கவர்ச்சியை அள்ளிவீசுவதில் அம்மணிக்கு அவ்வளவு தாராளம்.. அப்படியே மாலத்தீவு பக்கம் புரோமோஷனுக்காக சென்ற குட்டி ஜானு பிகினி உடையில் ஒரு வீடியோவை போட அதுவே அவருக்கு பொல்லாப்பை இழுத்துவிட்டுள்ளது...


கதையில் ஹீரோயின் ஸ்கூல் படிக்கிறாங்க என்று இயக்குனர்கள் சொன்னால் போதும்.. உடனே அந்த 96 படத்தில் குட்டி ஜானுவா நடிச்ச கௌரியை கூப்பிடுங்கப்பா என சொல்லும் அளவுக்கு குறும்புத்தனமான நடிகையாக வலம் வந்தவரை கடந்த ஒரு மாதமாக கையில் பிடிக்கவே முடியவில்லை. என்னமோ? ஏதோ? என ரசிகர்கள் தேடி கொண்டிருக்க, தன் நண்பர்களுடன் மாலத்தீவுக்கு பறந்துள்ளார் குட்டி ஜானு.

கவர்ச்சியான ஆடைகள், கவர்ந்திழுக்கும் போஸ் என சமூகவலைதளத்தை சில மாதங்களாக தீயாக்கிய குட்டி ஜானுவின் இன்ஸ்டா பக்கத்தில் தீடீரென ஒரு வீடியோ வந்து விழுந்துள்ளது.. குளியல் உடையில் குட்டி ஜானு ஓடிவந்து கட்டிலில் குதித்து, அவர்களின் மாலத்தீவு டிரிப்புக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்ற குட்டி ஜானுவின் தோழிகளை மட்டும் காட்டிவிட்டு கூடவே வந்திருந்த தோழர்களை வீடியோவிலிருந்து மறைக்க முயன்றது தெரிந்திருந்தது.

இதைப்பார்த்த குட்டி ஜானுவின் ஃபாலோயர்கள், யார் அந்த பையன்? பசங்களோட மாலத்தீவா ஜானு? என கேள்வி மேல் கேள்வியாக கேட்கத் தொடங்கினார்கள். புரமோஷன் செய்து ஓசி டிரிப் செல்லலாம் என நினைத்து கிளம்ப, கடைசியில் கிசுகிசு உருவாகும் அளவுக்கு ஆகிவிட்டதே என ஜானு மனம் நொந்து போகும் அளவுக்கு ஃபாலோயர்கள் ஆபாச கமெண்டுகளால் அர்ச்சனை செய்தனர்..

இதனால் என்ன செய்வதென தெரியாமல் தலையை சொரிந்த குட்டி ஜானு அந்த வீடியோவையே டெலிட் செய்துவிட்டு புதிய வீடியோவை அப்லோடு செய்தார். புதிய வீடியோவில், குட்டி ஜானுவுடன் டிரிப் சென்ற அனைத்து நண்பர்கள் மற்றும் தோழிகள் கட்டிலில் ஓடிவந்து குதிக்கும் காட்சிகள் உள்ளன..

00 Comments

Leave a comment