சினிமா

‘Thalapathy 68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் இவர் தான்..வெளியாகியுள்ள புதிய தகவல் | Vijay

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதால் அப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 2024ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

00 Comments

Leave a comment