மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதசுவாமி கோயிலில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் திருச்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வரவேற்றார். பின்னர் கோவில் நிர்வாத்தின் சார்பில் பூர்ண கும்பம் மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். திருச்சி மேயர் அன்பழகன் மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment