இந்தியா

உஜ்ஜைனி மகாகாளேஷ்வர் கோவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

உஜ்ஜைனி மகாகாளேஷ்வர் கோவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் ஆலய சிவலிங்கத்திற்கு 11 புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஜூன் 22 வரையிலான காலகட்டத்தில் மகாகாலேஷ்வர் சிவலிங்கத்திற்கு தொடர்ந்து புண்ணிய நதிகளின் நீரால் அபிஷேகம் செய்யப்படுவது மரபாக உள்ளது. அதற்கான சிவலிங்கத்திற்கு மேலே புனித குடங்கள் கட்டப்பட்டுள்ளன. கங்கை, சிந்து, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, நர்மதை, காவிரி,சரயு உள்ளிட்ட நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரால் சிவலிங்கத்திற்கு தொடர் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
 

00 Comments

Leave a comment