Big Stories

செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் தரிசனம்

செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் தரிசனம்

 

திண்டுக்கல்லில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில்
வனத்திற்குள் அம்மன் தெப்பஉற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்தார்.
திண்டுக்கல் மாநகர் பழனி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன்
கோவில் தெருவில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது.இந்த
கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாகும்.கடந்த அக்டோபர் 23ஆம்
தேதி கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 6
ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி
சாமி சட்டப்பட்டது ஆறாம் தேதி இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர் உலா
நடைபெற்றது. இது அடுத்து இளைஞர் நண்பர்கள் குழுவினர் சார்பாக ஏழாம் தேதி
பூச்சொரிதல் விழா தேர் பவனி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு
அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் இறுதி நாளான
இன்று கோவில் வளாகத்தில் வனத்துக்குள் தெப்பத்தில் காமாட்சி அம்மன்
அவதாரத்தில் எழுந்தருளிய செல்லாண்டி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த தெப்ப உற்சவத்தினை செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த
குடும்பத்தார் சிறப்பாக செய்திருந்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

00 Comments

Leave a comment