கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரையிலிருந்து உபயதாரர் சென்னை சி.ஏ.நடராஜர் குடும்பத்தினர் மூலம் நிரந்தரமாக கோயிலில் இருக்க ஞாயிற்றுக்கிழமை யானை கொண்டு வரப்பட்டது. கிழக்கு கோபுர வாயிலில் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் யானையை கும்ப மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீமந் நடராஜபெருமான் வீற்றுள்ள சித்சபை முன்பு பொதுதீட்சிதர்கள் சார்பில் யானைக்கு லட்டுபாவாடை பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. யானைக்கு சிவகாமலட்சுமி என்ற பெயரிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளைதாரர் நி.பாலதண்டாயுத தீட்சிதர், பட்டு தீட்சிதர்
உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
படவிளக்கம்- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிரந்திரமாக தங்க வந்துள்ள சிவகாமலட்சுமி யானையை வரவேற்று அழைத்துச் சென்ற பொதுதீட்சிதர்கள்
00 Comments
Leave a comment