தமிழ்நாடு

இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்தும்-முதல்வர் | Government-Principal

10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை முழுமையாக 
அரசே செலுத்தும். முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.*  
 
புதுச்சேரியில் அரசு பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த 
மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 
அரசு பள்ளியில் படித்து 10 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் 
கிடைத்துள்ள 22 மாணவர்கள் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று 
முதலமைச்சரை சட்டமன்ற வளாகத்தில் சந்தித்தனர். அப்பொழுது மாணவர்களுக்கு கல்வி 
கட்டணம் செலுத்துவது சிரமமாக உள்ளது என்று பெற்றோர் தெரிவித்தனர். 
 
அதிமுக அன்பழகன் மற்றும் 
 
மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதுக்கு இனங்கவும், மேலும் இதுபோன்று ஏழை 
எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு 
உருவாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், இதுகுறித்து கல்வித்துறை உயர் 
அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலருடன் 
ஆலோசனை நடத்திய பிறகு 
 
புதுச்சேரி அரசானது அரசு பள்ளியில் படித்து 10 சதவீத இடஒதுக்கீட்டில் 
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கான அரசு அறிவித்த கல்வி 
கட்டணத்தை முழுமையாக செலுத்தும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். 
 
*பேட்டி.. ரங்கசாமி.. முதலமைச்சர்.* 
 
இந்த அறிவிப்பிற்கு மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அதிமுக மாநில செயலாளர் 
அன்பழகன் ஆகியோர் சால்வை அணிவித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் 
கொண்டனர். 
  
*பேட்டி... அன்பழகன்.. அதிமுக மாநில செயலாளர்.*  

00 Comments

Leave a comment