தமிழ்நாடு

விமானத்தில் சென்னை வந்த அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி 100% தேர்ச்சி பெற்றதால் மாணவர்களை ஊக்குவிக்க திட்டம் | Government School

காங்கயம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விமானம் மூலம் சென்னைக்கு கல்விச் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். கோவை மாவட்டம் காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த கல்வியாண்டில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை விமான மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 46 பேரை இன்று காலை ஒருநாள் பயணமாக ஆசிரியர்கள் துணையுடன் சென்னைக்கு விமானத்தில் கல்விச் சுற்றுலா அழைத்து வந்து எழும்பூர் மியூசியம் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காட்டினர்.. இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில் இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு இது ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தனர்.

00 Comments

Leave a comment