காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாயை சேர்ப்பது குறித்து சமூக நலத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகவுள்ளது என்றார்.

00 Comments
Leave a comment