இந்தியா

திருப்பதி வனத்துறையால் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது மலைப்பாதையில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| Tirupati Forest Department

 
திருப்பதியில் மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு சிறுத்தை 
பிடிபட்டது. ஏற்கனவே திருப்பதி மலைப் பகுதியில் நான்கு வயது சிறுவன் கௌஷிக்கை 
சிறுத்தை தாக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு 
வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற இந்த 
சம்பவத்திற்கு பிறகு ஒரு சிறுத்தை கூண்டு வைத்துக் பிடிக்கப்பட்டு 
பாக்ராபேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.  இந்த சம்பவம் 
மறப்பதற்குள் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நெல்லுரை சேர்ந்த 6 வயது  சிறுமி 
லட்சிதாவை நடைபாதையில் பாத யாத்திரை சென்றபோது சிறுத்தை தாக்கி சாகடித்து 
முகத்தை சிதைத்து தின்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு நான்கு சிறுத்தைகள் 
அடுத்தடுத்து   பிடிக்கப்பட்டது. இதில் எந்த சிறுத்தை சிறுமி லட்சிதாவை 
அடித்துக்கொண்டு சாப்பிட்டது என்பது குறித்து அறிவதற்காக லட்ஷித்தா உடல் அருகே 
அந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சிறுத்தையின் முடி உள்ளிட்டவை  மரபணு சோதனைக்கு 
அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறுமி லட்ஷிதா தாக்கிய பிறகு  பிடிபட்ட நான்கு 
சிறுத்தையில்  முதலில் பிடிபட்ட இரண்டு சிறுத்தை மரபணு சோதனை முடிவில் சிறுமி 
லட்ஷிதாவை தாக்கியது அல்ல என தெரிய வந்தது. இதனை அடுத்து ஒரு சிறுத்தையை 
நாகார்ஜுன சாகர் ஸ்ரீசைலம் புலிகள்  வன சரணாலயத்தில் கொண்டு சென்று 300 
கிலோமீட்டர் தொலைவில் விடப்பட்டது. ஒரு சிறுத்தை விசாகப்பட்டினம் உயிரியல் 
பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு சிறுத்தைகளின் மரபணு சோதனை 
முடிவுகள் வரும் வரை திருப்பதி உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும் 
என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் மேலும் 5 சிறுத்தைகள் 
திருப்பதி மலை பாதையில் சுற்றி வருவது வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள 
கண்காணிப்பு கேமராவில் தெரிய வந்தது. இதனை அடுத்து தொடர்ந்து கூண்டு வைத்து 
சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். 
இந்நிலையில் இன்று காலை மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது. சிறுமியை 
லட்ஷிதாவை தாக்கிய பிறகு ஐந்தாவது சிறுத்தை என்றும் கடந்த ஜூன் 24 கெளசிக்கை 
தாக்கிய பிறகு  கடந்த 70 நாட்களில் இதுவரை ஆறு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு 
இருப்பதாகவும் அதில் இரண்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. ஒரு சிறுத்தை 
விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் 
தெரிவித்தனர். 

00 Comments

Leave a comment