இந்தியா

கனமழை காரணமாக நர்மதா நதியில் வெள்ளப்பெருக்கு .. மும்பை-அகமதாபாத் ரயில் சேவை நிறுத்தி வைப்பு

நர்மதா நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுவதால், மும்பை-அகமதாபாத் ரயில் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பரூச் மற்றும் அங்கலேஷ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாலத்தை தொடும் விதமாக நீர் மட்டம் அதிகரித்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இந்த இரு நகரங்களுக்கு இடையே ஓடும் அனைத்து பயணியர் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன பாதிக்கப்பட்டுள்ள ரயில் பயணிகளுக்கு குடிநீர், டீ மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை-அகமதாபாத் தேஜஸ், சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

00 Comments

Leave a comment