இந்தியா

ஆவேஷம் படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் ஒரு ஜீனியஸ்-சமந்தா

ஆவேஷம் படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் ஒரு ஜீனியஸ்-சமந்தா

'ஆவேஷம்' மலையாள படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாமை ஒரு ஜீனியஸ் என நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான 'ஆவேஷம். படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இப்படத்திற்கு நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாமை ஜீனியஸ் என்றும் பாராட்டியுள்ளார். சமந்தாவின் அந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

00 Comments

Leave a comment