இந்தியா

கோகேர்னாக்கில் ஆறாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வரும் பாதுகாப்பு படையினர் | Kashmor

ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஆறாவது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அனந்தநாக் மாவட்டத்தின் கோகேர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 13ஆம் தேதி அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், ஜம்மு - காஷ்மீர் காவல்துறை அதிகாரி உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

00 Comments

Leave a comment