இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி

விறுவிறுப்பான ஆட்டத்தில் திரில் வெற்றியை இந்திய அணி தட்டிச்சென்றது.
இந்தியா வெற்றி
Published on: 

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. கிறிஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்ற போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் திரில் வெற்றியை இந்திய அணி தட்டிச்சென்றது.

கிரிக்கெட்
இந்தியா பவுலிங்நியூஸ்தமிழ்24x7

4 விக்கெட் வித்தியாசம்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி, 19.5 ஓவரில் 181/6 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 70 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். இவருடன் பெவோன் ஜேக்க்பஸ் 58 ரன் குவித்து இருந்தார்.

2ஆவது வெற்றி
இந்தியா வெற்றி நியூஸ்தமிழ்24x7

இந்திய அணி அபாரம்

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 181/6 ரன் எடுத்தது. 181 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சாம்சன் 17, அபிஷேக் சர்மா 27, ஷ்ரேயஸ் ஐயர் 7 என்ற அளவில் இருந்தனர்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்கள் என 6 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசினார். நமன் தீர் 31 ரன்களும், நிதிஷ் ரெட்டி 26 ரன்களும் குவித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

டி20 கிரிக்கெட்
இந்தியா, நியூசிலாந்து

இந்தியா 2-1 முன்னிலை

இதன்மூலம், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியா வெற்றி
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்
newstamil.tv