இந்தியா

நாட்டுக்கு பிறந்தநாள் பரிசு டெல்லியில் யஷோபூமி திறப்பு

டெல்லி துவாரகாவில் ஐந்தாயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக, சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள யஷோபூமி என்ற இந்தியா சர்வதேச மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மாநாட்டு மையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட73 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ள யஷோபூமியில் நவீனமான 15 மாநாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

11 ஆயிரம் பிரதிநிதிகள் அமரும் வகையில் 13 மாநாட்டு சந்திப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து 500 பேர் பங்கேற்க கூடிய பால்ரூம் உள்ளது. ஒரு லட்சத்து ஏழாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் மிகப்பெரிய சந்திப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள்  போன்றவற்றை இங்கு நடத்த முடியும். 

முன்னதாக யஷோபூமியை டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  அப்போது மெட்ரோ பணியாளர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

யஷோபூமி துவாரகா செக்டர் 25 ல் புதிய மெட்ரோ நிலையம் அமைக்கப்பட்டு, அது டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு, மிகவும் சிறப்பான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.(மேலும் பலதரப்பட்ட பாரம்பரிய கலைஞர்களுக்கு மேம்பாட்டுக்காக பிஎம் விஸ்வகர்மா என்ற பலகோடி மதிப்பிலான நிதி உதவித் திட்டதை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

இதன் முன்னோடியாக )
விஷ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு 
யஷோபூமியை திறந்து வைப்பதற்கு முன், பல்வேறு பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்கும் கண்காட்சியை பார்வையிட்ட மோடி அந்த கலைஞர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், விஸ்வகர்மாவின் படத்திற்கு மோடி மலர்மரியாதை செய்தார்.

யஷோபூமி திறப்பு விழாவுக்கு முன்னர் மெட்ரோவில் பயணம் செய்த மோடி சக பயணிகளுடன் சகஜமாக பேசியதுடன், குழந்தை ஒன்றையும் கொஞ்சியது மெட்ரோ பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

00 Comments

Leave a comment