இந்தியா

இலங்கை அதிபருக்கு டோஸ் விட்ட பிரதமர் மோடி..நன்றி தெரிவித்த அண்ணாமலை

தமிழக மீனவர்களின் பிரச்சனையில் மனிதாபிமான அணுகுமுறையுடன் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே செயல்படவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு நாள் சுற்றுபயணமாக இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சார பாரம்பரியத்தை புதுப்பித்திருக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேசியதற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்

00 Comments

Leave a comment