தமிழ்நாடு

கோடிகளில் வரதட்சணை கேட்டு கொடுமை.. கூண்டோடு சிக்கிய பாமக MLA குடும்பம் | Salem | PMK

சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவத்தின் மகன் சங்கருக்கும், மனோவியா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண் வீட்டார் 5 கோடி ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மனோவியாவிடம் அவ்வப்போது நகை, பணம் கேட்டு சங்கர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதுபற்றி மனோவியா அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி் மீது வரதட்சணை கொடுமை உள்பட 6 பிரிவில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவான எம்.எல்.ஏ குடும்பத்தினர் முன்ஜாமின் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

00 Comments

Leave a comment