தமிழ்நாடு

பெரியகரட்டில் சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி வைரன்காடு கிராமத்தை ஒட்டியுள்ள  பெரியகரட்டு பகுதியில் திடீரென ஆடுகள் காணாமல் போனது. இதையடுத்து இதுகுறித்து  வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெரியகரட்டிற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
உள்ளதை கண்டறிந்தனர்.  பெரியக்கரட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற நான்கு ஆடுகளை சிறுத்தை வேட்டையாட முயன்ற போது, தப்பிய ஆடுகள் அங்குள்ள
செங்குத்தான பாறையில்  தஞ்சமடைந்தன. இதனிடையே, பாறையில் இருந்து இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தன.  இதையடுத்து , சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க டிரோன் கேமிரா அப்பகுதியை வனத்துறையினர் நோட்டமிட்டபோது இது தெரியவந்தது . அப்போது ஆடுகளை வேட்டையாடும் வகையில்,  சிறுத்தை பாறை மீது படுத்து ஆடுகளை நோட்டமிட்டு கொண்டு இருந்ததை வனத்துறை அதிகாரிகள் படம் பிடித்துள்ளனர். பின்னர் இன்று காலை வனப்பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆடுகளை பாதுகாப்பாக கீழே விரட்டி விட்டு சிறுத்தை படுத்திருந்த பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள மரங்கள் மற்றும் பாறைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment