உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் இருப்பதாக குறிப்பிட்டு நடிகர் அசோக் செல்வன் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட நாள் காதலர்களான நடிகர் அசோக் செல்வனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் இட்டேரியில் திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில், சமூகவலைதளங்களில் ஒரு சிலர் கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அசோக் செல்வன், உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சினிமா
00 Comments
Leave a comment