தமிழ்நாடு

உத்தமபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் குவிந்துள்ள பறவைகள்

உத்தமபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் குவிந்துள்ள பறவைகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள வயல் வெளிகளில் இரைதேடி முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகளை, அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். கூடலூர், கம்பம், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெற்கதிரில் பால்மணி கோர்க்கும் நேரத்தில், ஆண்டுதோறும் இப்பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பது வழக்கம்.அந்தவகையில் நடப்பாண்டும் வயல்வெளிகளில் உள்ள புழு, பூச்சிகள், நெல்மணிகளை உண்பதற்காக, நீலமூக்கு நாரை, நத்த கூட்டுநாரை, பிளமிங்கோ, அகல வாயன், கருப்பு உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் படையெடுத்துள்ளன.

 

00 Comments

Leave a comment