தமிழ்நாடு

விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து

விவேகானந்தர் மண்டபத்திற்கு  படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு, வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு, அன்றைய தினம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

00 Comments

Leave a comment