தமிழ்நாடு

குண்டும் குழியுமாக உள்ள மலைக்கிராம சாலை

குண்டும் குழியுமாக உள்ள மலைக்கிராம சாலை

 

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் இருந்து வாடிப்பட்டி சாலை செல்லும்
பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மேற்பட்ட மலைகிராம மக்கள் இப்பகுதியில்
வாசிக்கிறார்கள், கடந்த 15 ஆண்டு காலமாக மலை கிராமங்களுக்கு என்று சாலை
வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை ஏற்கனவே தார் சாலை அமைக்கப்பட்ட பகுதிகளில்
கனமழையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது,

இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில்
அரசு பேருந்துகள் பொதுமக்கள் விவசாய பயிர்களான பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும்
செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது, இதனால் நீண்ட காலமாக பல கிராமங்களுக்கு
சாலை வசதி செய்து கொடுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர், ,

ஆனால் இது வரையும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சாலைகள் போடுவதாக
சொல்லி செல்கிறார்கள் திடீரென்று வந்து அதிகாரிகளுடன் வந்து ஆய்வு
செய்கிறார்கள் ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை

*இதுகுறித்து விவசாயி பிச்சையன் கூறுகையில்*

பாலமேடு வாடிப்பட்டி வனத்துறைக்கு சொந்தமான செல்லும் சாலை இரண்டு கிலோமீட்டர்
தூரம் உள்ளது கடந்த 15 ஆண்டுகளாக கிராமப் பகுதியில் சாலைகள் மிகவும்
குண்டும் குழியுமாக தான் உள்ளது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தார்சாலை
போடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது, மீதம் உள்ள சாலைகளை வனத்துறை
கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி எங்கள் கிராமங்களுக்கு நெருக்கடி கொடுத்து
வருகிறார்கள்,

மேலும் அகலப்படுத்த புதிதாக சாலைகள் போடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ மாணவிகள் விவசாயிகள் கர்ப்பிணி பெண்கள் 108
ஆம்புலன்ஸ் கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் சாலை சேதமடைந்ததால் வருவதற்கு
தயக்கம் காட்டுகிறார்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

00 Comments

Leave a comment