இந்தியா

சந்திரபாபு நாயுடு மீது விசாரணை நடத்த ED உத்தரவிட்டது..விதிகளை மீறி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.371 கோடி ஒதுக்கினார்

ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது சிஐடி விசாரணை நடத்த அமலாக்கத்துறை அறிவுறுத்தியதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது. டெல்லியில் இதை தெரிவித்த ஆந்திர மாநில சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் சஞ்சய், ஆட்சியில் இருந்த போது, விதிகளையும், கட்டுப்பாட்டு சட்டங்களையும் மீறி திறன் மேம்பாட்டுத் திட்டத்தை சந்திரபாபு துவக்கியதாகவும், அதன் மூலம் 371 கோடி ரூபாயை மாநில கஜானாவில் இருந்து நிழல் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார். திறன் மேம்பாட்டு நிறுவன ஊழலுக்கு சந்திரபாபு நாயுடுவே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.தாங்கள் நடத்திய விசாரணையில் மொத்தமுள்ள 371 கோடி ரூபாயில், சந்திரபாபு நாயுடு 241 கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment