புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், உதரவிதான குடலிறக்கம் எனும் அரியவகை நோயுடன் பிறந்த ஆண் குழந்தை,மருத்துவர்களின் முயற்சியால் காப்பாற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சார்ந்தவர் கூலி தொழிலாளி வினோத்குமார். இவரது மனைவி சுபாவிற்கு பிறந்த ஆண் குழந்தை, உதரவிதான குடலிறக்க நோய் காரணமாக மூச்சுவிடாமல் அவதிப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்ட , தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்றினர். தற்போது குழந்தை நலமுடன் உள்ள நிலையில், லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இது போன்று பாதிப்பு வரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment