தமிழ்நாடு

இடிந்து விழுந்த பேருந்து நிலைய மேற்கூரை...மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் காயம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரை இடிந்து விழுந்ததில், பேருந்திற்காக காத்திருந்த இருவர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்து நிலைய மேற்கூரைகள் பழுதடைந்தும், அவ்வப்போது இடிந்து விழுவதும் தொடர்கதையாகி வந்த நிலையில், இரவு இரண்டு மணியளில் மேற்கூரையானது இடிந்து விழுந்தது. இதில் தஞ்சாவூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கூரையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

00 Comments

Leave a comment