தமிழ்நாடு

நிதி நிறுவனம் மூலம் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக புகார் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்

பிட்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணத்தை
கொடுத்தால் இரட்டிப்பு லாபம் பெற்றுத்தருகிறேன் என்று 9 நபர்களிடம் சுமார் 26
லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிதிநிறுவன அதிபர்கள் தொடர்ந்து
ஏமாற்றி வந்ததால் எஸ் பி அலுவலகத்தில் புகார்-விசாரணை, பாதிக்கப்பட்டவரிடம்
அலட்சியமாக பதில் அளித்த காவல்துறை.

கரூர் வடக்கு காந்திகிராம் பகுதி சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது தந்தை,
மனைவி சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இந்த நிதி நிறுவனத்தின் மூலம் பிட்காயின்,தங்கம், டிரேடிங்,மற்றும்
வெளிநாட்டு பணம் ஆகியவற்றின் முதலீடு செய்வதாக ஆவணங்களை காண்பித்து, முதலீடு
செய்யுமாறு மூளை சலவை செய்துள்ளார்.

இந்த ஆசை வார்த்தையில் ஏமாந்த ரோஸ்னா பர்வீன்,காதர் அலி, விமல்,ஆயிஷா, வினோத்
என 9 நபர்களிடம் உங்கள் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி சுமார் 26 லட்ச
ரூபாய் வரை வாங்கியுள்ளார்.

நிதி நிறுவன அதிபர்கள் கூறியது போல் சில காலங்கள் மட்டுமே பணத்தை கொடுத்து
வந்த நிதி நிறுவனம், பின்னர் அவர்கள் கூறியது போல் தராமல்,நிதி நிறுவனம்
ஏமாற்ற தொடங்கியது, பலமுறை முயற்சி செய்தும் எங்கள் பணம் கிடைக்கவில்லை,நிதி
நிறுவனத்தையும் பூட்டப்பட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டிற்கு சென்று கேட்டால்
கொலை மிரட்டல் விடுகின்றனர் என குற்றச்சாட்டபட்டு கரூர் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில் கரூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நிதி
நிறுவனத்தின் அதிபரான வேலாயுதம் மற்றும் அவரது மனைவி ராமேஷ்வரி அழைத்து வந்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை நடந்து கொண்டிருந்த போது வேலாயுதத்தின் மனைவி ராமேஸ்வரியை போலீஸ்
பாதுகாப்புடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியே
அழைத்து சென்றனர் இது குறித்து பாதிக்கப்பட்ட கேட்டதற்கு உங்கள் பிரச்சனை
நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதிலளித்ததாக
கூறுகின்றனர்.

நிதி நிறுவனம் மூலம் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக புகார்  எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்

00 Comments

Leave a comment