தமிழ்நாடு

குடும்பத்தகராறில் பிரிந்து சென்ற மனைவி,சேர்த்து வைக்கக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர்

குடும்பத்தகராறில் பிரிந்து சென்ற  மனைவி,சேர்த்து வைக்கக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பத்தகராறில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர், மறுநாளே மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். சேலம் ராமநாயக்கம்பாளையத்தை சேர்ந்த பெருமாள், தஞ்சை ஒரத்தநாடு அடுத்த நெய்வேலியை சேர்ந்த சாந்தியை 8 ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக திருமணம் செய்தார். குடும்பத்தகராறால் கோபித்து கொண்டு தந்தை வீட்டிற்கு வந்த சாந்தியை, பெருமாளும் அவரது உறவினர்களும் நேரில் வந்து அழைத்தும் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். இதனால் கறம்பக்குடியில் உள்ள செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த பெருமாளை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர். புதன்கிழமை சாந்தி பணிபுரியும் இரும்புக்கடைக்கு சென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

00 Comments

Leave a comment