தமிழ்நாடு

டிசம்பர் 17-ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் இருக்க வேண்டும்-அமைச்சர்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு
கூட்டத்தில் அமைச்சர் ஆர் காந்தி 17ஆம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு
இந்தியாவே திரும்பி பேசுற அளவிற்கு வெற்றிபெற வேண்டுமென பேச்சு

ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட திமுக தலைமை
அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் செயற்குழு
கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட கழக செயலாளரும் தமிழக கைத்தறி மற்றும்
துணிநூல் அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்து
கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர் காந்தி

திமுகவில் இளைஞர் அணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தான் எனவும் அவரை மிஞ்சும்
அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மக்களுக்காக
உழைக்கிறாரோ பல மடங்கு கழகத்திற்காக உழைத்து வருகிறார் எனவும் அதேபோல்
தொண்டர்கள் வாக்காளர் விவரத்தை சேகரித்து நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40
வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வருகின்ற டிசம்பர் 17-ஆம் தேதி
அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு தொண்டர்கள்
அனைவரும் கலந்து கொண்டு இந்தியாவே திரும்பி பேசுற அளவிற்கு மாநாடு மாபெரும்
வெற்றி பெற வேண்டுமென கூட்டத்தில் பேசினார்..
 

டிசம்பர் 17-ஆம் தேதி  திமுக இளைஞரணி மாநாடு   இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் இருக்க வேண்டும்-அமைச்சர்

00 Comments

Leave a comment