தொழில்நுட்பம்

சந்திரயான்-3 க்கு உபகரணங்கள் வழங்கிய பொதுத்துறை நிறுவன HEC நிறுவன ஊழியர்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் இல்லை | Chandraayan 3

சந்திரயான் மூன்று திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள ஒரு சோக கதை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் திட்டத்திற்காக இரண்டாவது ஏவுதளத்தில் பல பாகங்களை, ராஞ்சியில் உள்ள பொதுத் துறை நிறுவனமான Heavy Engineering Corporation பொறியாளர்களும், தொழிலாளர்களும் தயாரித்து வழங்கினர். ஆனால் இவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது பற்றி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை என்பதால், சந்திரயான் முன்று கட் அவுட்டுகளுடன் இவர்கள் வரும் 21 ஆம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சந்திரயான் திட்டத்தில் எலக்ட்ரிக் ஓவர்ஹெட் டிராவல்லிங் கிரேன்கள்,மொபைல் லாஞ்சிங் பெடஸ்டல் உள்ளிட்டவற்றை தாங்கள் தயாரித்து வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

00 Comments

Leave a comment