தமிழ்நாடு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவு திருவண்ணாமலை, திருவள்ளூர், ஈரோடு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை  சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

00 Comments

Leave a comment