தமிழ்நாடு

கோத்தகிரியில் தடையை மீறி விற்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - உரிமையாளர் கைது

கோத்தகிரி  சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, ராம்சந்த் பகுதியில் நாசர் என்பவரது கடையில்  திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது  தெரியவந்தது. இதையடுத்து நாசரை கைது செய்த போலீசார், அவர் கடையில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

00 Comments

Leave a comment