சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வுப்பெற்ற திருக்கோவில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கான காசோலையை வழங்கினார். அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 4000 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட நிலையில் அதற்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.இதனைதொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களுக்கு பங்கு நிதிக்கான ஒப்புதல் ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment