தமிழ்நாடு

ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம் தாமரைகள் அகற்றப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம், வாய்மேடு ,மருதூர்,
ஆயக்காரன்புலம், பன்னாள்,கருப்பம்புலம், கோவில்தாவு வரை சுமார் 25 கிலோ
மீட்டர் தூரம் வரை இந்த பகுதியில் மிகப்பெரிய பாசன மற்றும் வடிகால் ஆறாக
மாணங்கொண்டான் ஆறு உள்ளது.

இந்த ஆற்றில் அதிக அளவில் ஆகாய தாமரை மண்டிக்கிடக்கிறது. இந்த ஆற்றின் வழியாக
தான் திருவாருர், நாகை மாவட்டத்தில் ஒடும் முள்ளியாற்று பாசன பகுதியில் உள்ள
சுமார் ஒரு லட்சம் ஏக்கர்சம்பா நெல் வயலில் தேங்கிய மழைநீர் வடிந்து
மாணங்கொண்டான் ஆறுவழியாக கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் ஆற்றில் மண்டி
கிடக்கும் ஆகாயத்தாமரையால் பெய்து வரும் பருவமழையால் வயலில் மழைநீர் தேங்கி
வடிய முடியாமல் பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது

ஆகையால் உடனடியாக ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்
என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனை ஏற்று மாவட்ட நிர்வாகம்
வேதாரண்யம் பகுதியில்
முள்ளியாற்றில் வெங்காயதாமரை அகற்றும் பணி ஹிட்டாச்சி எந்திரம் மூலம் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் ஆற்றில் கிடக்கும் வெங்காயத்
தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு ஆறுகளில் நீர்
தேங்காமல் தண்ணீர் உடனடியாக வடிந்து விடும் என விவசாயிகள் மகிழ்ச்சி
தெரிவித்தனர்.

ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்   தாமரைகள் அகற்றப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

00 Comments

Leave a comment