தமிழ்நாடு

தேர்தல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேர்தல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி
அனில் மசிஹ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேயர் தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளில் தேவையில்லாமல் ஏதோ எழுதி, எட்டு வாக்குகளை செல்லாதாக அறிவித்து அதன் மூலம் பெரும்பான்மை இல்லாத பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இது குறித்த விசாரணையில், தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த சண்டிகர் மேயர் தேர்தல் மிகவும் மோசமான ஒரு நடவடிக்கை என விமர்சித்தார். இது குறித்த விசாரணையில் நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடி கேள்விகளால் திக்குமுக்காடிய தேர்தல் அதிகாரி, ஏற்கனவே வாக்கு சீட்டுகள் அனைத்தும் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த தாவும், தாம் அது குறித்து மட்டுமே அதில் எழுதியதாகவும் மழுப்பினார். இதை ஏற்காத தலைமை நீதிபதி, வாக்கு எண்ணிக்கை பற்றிய முழு வீடியோவையும் வாக்கு சீட்டுகளையும் நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

00 Comments

Leave a comment