தமிழ்நாடு

மதுரைக்கும் வந்தாச்சு, நம்ம மதுரை செல்பி பாய்ண்ட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் வீடியோ

மதுரைக்கும் வந்தாச்சு நம்ம மதுரை செல்பி பாய்ண்ட் சமூக வலைதளங்களில்
ட்ரெண்டாக்கி வரும் நெட்டிசன்கள்


மதுரையின் அடையாளமாக மதுரைக்கு வரும் பிற மாவட்ட மக்கள் மற்றும் மாநிலங்களைச்
சேர்ந்தவர்கள் காணும் வண்ணம் ஐந்து இடங்களில் மதுரையின் புராதான சின்னங்கள்
அமைக்கப்பட்டுள்ளன

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டு காளையை தழுவும் காளையர்
போன்ற உருவச்சிலை,பாத்திமா கல்லூரி பகுதியில் சித்திரை தேர்,பழங்காநத்தம்
ரவுண்டானா பகுதியில் 10 தூண் மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனை தர்பார்
நாற்காலி,திருப்பரங்குன்றம் செல்லும் பகுதியில் பாறைக்கு மேல் மயில்,செல்லூர்
பகுதியில் கபடி விளையாட்டு வீரர்கள் சிலை

இந்த வரிசையில் தற்போது ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு
காளையை அனைவது போன்ற சிலை அருகே மாநகராட்சியின் மூலம் நம்ம மதுரை என்னும்
மிகப்பிரமாண்டமான செல்பி எடுக்கக் கூடிய வகையில் போர்டு ஒன்று தயார்
செய்யப்பட்டு வருகிறது

மேலும் இந்த ரவுண்டானாவை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைப்பதற்கான பணிகளும்
உமரமாக நடைபெற்று வருகின்றன

பொதுவாக சமீபகாலமாக செல்பி என்பது அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக
இருந்து வரக்கூடிய வேளையில் மதுரைக்கு வருபவர்கள் நம்ம மதுரை என்று இதன்
முன்னே நின்றவாறு புகைப்படம் எடுத்து பதிவிடும் வகையில் அமைய உள்ள நிலையில்
முன்னேற்பாடு களுக்கான

பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போது மதுரை சேர்ந்த இளைஞர்கள் தங்களது
சமூக வலைதளங்களில் இதை வைராக்கிய வருகின்றனர்
 

மதுரைக்கும் வந்தாச்சு, நம்ம மதுரை செல்பி பாய்ண்ட்   சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் வீடியோ

00 Comments

Leave a comment