தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு பஞ்சாமிர்தம் டப்பா, டின் ஆகியவற்றின் விலை ரூ.5 உயர்வு | Palani Temple

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், பஞ்சாமிர்தம் விலை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பழனி வந்து செல்லும் பக்தர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம், அடிவாரம், மலைக்கோவில், கிரிவீதி, மின்இழுவை ரயில் நிலையம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. 500 கிராம் எடை கொண்ட பஞ்சாமிர்தம் டப்பா 35 ரூபாய்க்கும், பஞ்சாமிர்தம் டின் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி 5 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சாமிர்தம் டப்பா 40 ரூபாய்க்கும், பஞ்சாமிர்தம் டின் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

00 Comments

Leave a comment