தமிழ்நாடு

தந்தை பெரியார் சிலையை அவமதித்த சமூக விரோத கும்பல்.. நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுகத்தில் புகார்

தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாக அவரது சிலைக்கு மாட்டு சாணத்தை வீசியடித்து அசுத்தம் செய்த சமூக விரோத கும்பலை கைது செய்யவேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர். கோவை வடசித்தூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு சில சமூக விரோதிகள் மாட்டு சாணம் வீசி அசுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோத கும்பலை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

00 Comments

Leave a comment