தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். உரிமை தொகையை பெற ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்தநிலையில், நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment