தமிழ்நாடு

பாஜக பிரமுகரிடம் இருந்து ரூ.81 ஆயிரம், பூத் சிலிப்புகள் பறிமுதல்

பாஜக பிரமுகரிடம் இருந்து ரூ.81 ஆயிரம், பூத் சிலிப்புகள் பறிமுதல்

கோவை மாவட்டம் பூலுவபட்டியில் பாஜகவினரிடம் இருந்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 81 ஆயிரம் ரூபாய் மற்றும் பூத் சிலிப்புகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பூலுவப்பட்டி மாரியப்பன் டீக்கடையில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற பறக்கும் படையினர் பணப்பட்டுவாடா செய்வதற்காக வார்டு வாரியாக பிரித்து கொடுத்து கொண்டிருந்த ஆலந்துறை பாஜக மண்டல் தலைவர் ஜோதிமணியை கையும் களவுமாக பிடித்தனர். பூலுவப்பட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12, 13, 14, 15-ல் ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள வார்டுகளுக்கு பட்டுவாடா செய்யப்படவிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 

00 Comments

Leave a comment