இந்தியா

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைனின் செர்னிவ் நகரை 3 ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 3 குழந்தைகள் உட்பட 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் ஒலெக்சாண்டர் லோமகோ தெரிவித்தார். இதற்கு ரஷ்யாவை குற்றம்சாட்டிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் வான் பகுதியை பாதுகாக்க மேற்கு நாடுகள் இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உக்ரைன் போதுமான வான் பாதுகாப்பு உபகரணங்களை பெற்றிருந்தால் ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உலகின் உறுதிப்பாடு போதுமானதாக இருந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
 

00 Comments

Leave a comment