தமிழ்நாடு

மணல் குவாரியை முற்றுகையிட்டு உரிமையாளர்கள் போராட்டம் மணல் அள்ள டிராக்டர்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல்
அள்ளுவதற்காக லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு, ஆன்லைன் மூலம் மணல்கள்
எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது புத்தூர் அரசு மணல் குவாரியில், பாபநாசம்
சுற்று பகுதியில் உள்ள டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள்
வாழ்வாதாரத்துக்கு டிராக்டர் வண்டி மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என
வலியுறுத்தி, புத்தூர் மணல் குவாரியை முற்றுகையிட்டு, 100-க்கும் மேற்பட்ட
டிராக்டர் வாகனங்களை நிறுத்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு
வந்த பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் அரசு
அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டிராக்டர்களிள் மணல் அள்ளுவதற்கும் உரிமம் வழங்கப்படும் வரை
லாரிகளுக்கும் உரிமம் வழங்கப்படாது என அறிவித்ததை தொடர்ந்து போராட்டம்
கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு
காணப்பட்டது.

மணல் குவாரியை முற்றுகையிட்டு உரிமையாளர்கள் போராட்டம்   மணல் அள்ள டிராக்டர்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

00 Comments

Leave a comment