தமிழ்நாடு

திருவள்ளூர் இ-சேவை மையத்தில் கல்வி கற்கும் பள்ளி மாணவர்கள் .. புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க பெற்றோர்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க பள்ளி கட்டிடமானது மிகவும் பாழடைந்து காணப்படுவதால் அருகில் உள்ள இ சேவை மையத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் புதிதாக 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

00 Comments

Leave a comment