தமிழ்நாடு

பாடகர் SPBயின் 3ஆம் நினைவு தினம்- SPB சரண் அஞ்சலி SPBயின் பாடல்கள் பொது சொத்து - SPB சரண் |SPB Charan Anjali

எஸ்பிபியின் பாடல்கள் பொது சொத்து, அவரது பாடல்களை யார் வேண்டுமானாலும் 
பாடலாம், ரசிக்கலாம். எஸ்பிபியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய 
பின்னர் எஸ்பிபி சரண் பேட்டி 
 
 
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மறைந்த பிரபல பின்னாடி பாடகர் பாடும் 
நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபி யின் 3ஆம் 
ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து 
வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் எஸ்பிபி 
நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்பிபியின் 
மகனும் பாடகருமான எஸ்பிபி சரண் தனது தந்தையின் நினைவிடத்தில் உருக்கமாக மலர் 
தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பிபி சரண் 
இத்தனை ஆண்டுகளாக பாடல்களால் தனது தந்தையை வாழ வைத்து கொண்டிருக்கும் 
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக உருக்கமாக கூறினார். எஸ்பிபியின் 
பாடல்கள் அரசுடையாமை ஆக்கப்படுமா என்ற கேள்விக்கு எஸ்பிபியின் பாடல்கள் பொது 
சொத்து என்றும், அவரது பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம், ரசிக்கலாம் 
என்றார். எஸ்பிபிக்கு சிலை அமைக்க வேண்டும், எஸ்பிபிக்கு மணி மண்டபம் அமைக்க 
வேண்டும் என்று தற்போது அரசுக்கு கோரிக்கை வைக்கும் எண்ணம் இல்லை எனவும், ஒரு 
மகனாக, ரசிகனாக என்னால் முடிந்ததை தற்போது செய்து வருவதாக தெரிவித்தார். 
தகுதியான விருதுகள் தானாக கிடைக்கும் என தெரிவித்தார். 
 
ஐதராபாத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் எஸ்பிபி யின் பாடல்வரிகளை மாலையாக 
கழுத்தில் அணியின் முழங்கால் இட்டு நடந்து வந்து எஸ்பிஐ நினைவிடத்தில் 
மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தினார். 
 

00 Comments

Leave a comment