தமிழ்நாடு

கபடிப் போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்ற தமிழ் தலைவாஸ் மற்றும் சென்ட்ரல் ரயில்வே மும்பை அணிகள்

 

திசையன்விளையில் நடைபெற்ற இந்திய அளவிலான  கபடி போட்டியில் ஆண்கள் அணியில் தமிழ் தலைவாஸ் அணியும் பெண்கள் அணியில் சென்ட்ரல் ரயில்வே மும்பை அணிக்கும் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.
 
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. நான்காவது நாள் இறுதிப்போட்டி நிகழ்ச்சியை  சபாநாயகர் அப்பாவு குத்து விளக்கு ஏற்றி வீரர்களை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.
 
கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் நேற்று மாலை 6 மணிக்கு கபடி போட்டி தொடங்கியது. இறுதிப் போட்டியில் ஆண்கள் அணியில் டெல்லி தமிழ் தலைவாஸ் அணியும், டெல்லி கிரீன் ஆர்மி அணியும் மோதியது. இதில் 27 புள்ளிகள் பெற்று டெல்லி தமிழ்
தலைவாஸ் அணி முதல் இடத்தை பிடித்து வெற்றி கோப்பையையும் 2,00,100 ரூபாய் ரொக்க தொகையையும் பரிசாக பெற்றது. 19 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பெற்ற டெல்லி கிரீன் ஆர்மி அணிக்கு ஒன்றரை லட்சத்து 100 ரூபாய் ரொக்க
தொகையும் வெற்றி கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
 
பெண்கள் அணியில் இறுதிப் போட்டியில் மும்பை  சென்ட்ரல் ரயில்வே மற்றும் மும்பை வெஸ்டர்ன் ரயில்வே இரு அணிகளும் மோதியது. இதில் சென்ட்ரல் ரயில்வே அணி 31 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்து. இந்த அணி
ஒன்றரை லட்சத்து 100 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை பெற்றது. 21 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்ற வெஸ்டர்ன் ரயில்வே அணிக்கு ஒரு லட்சத்து 100 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

00 Comments

Leave a comment