தமிழ்நாடு

தஞ்சை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஓட்டல்களில் இருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி, உடலுக்கு தீங்கு 
விளைவிக்கும் உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதாஎன உணவு பாதுகாப்புத்துறை 
அதிகாரிகள் அதிரடி சோதனை.

150 கிலோ கோழி இறைச்சி, உள்ளிட்டவைகள் பறிமுதல் 
செய்த அதிகாரிகள்.

அதிகம் நிறம் ஏற்றிய உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க 
வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.
 
 தஞ்சையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் 
டாக்டர் சித்ரா தலைமையில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி 
முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
 
தஞ்சை ஆபிரகாரம் பண்டிதர் தெரு, கீழராஜவீதி, கரந்தை, தென்கீழ் அலங்கம் 
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் இந்த சோதனையை 
நடத்தினர்.

இந்த சோதனையின் போது கடைகளில் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டு 
இருந்த கோழி இறைச்சி,

அதிக கலர் பொடி தடவி வைக்கப்பட்டு இருந்த கோழி இறைச்சி, 
பல முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதற்காக வைத்திருந்ததது, 
கெட்டுபோன நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.. 
 
 

00 Comments

Leave a comment