தமிழ்நாடு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த கோபி, தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் தம்பி கண்ணனுடன், உறவினர் வீட்டு திருமணத்துக்காக காரில் சிவகாசி சென்றுள்ளார். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த கல்லுப்பட்டி பகுதியில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் விஜயலட்சுமியும், கண்ணனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார்.

00 Comments

Leave a comment