தமிழ்நாடு

ஆளுநர் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்.. தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக ஆளுநர் கருத்து |

தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக ஆளுநர் கூறியது குறித்த கேள்விக்கு அதற்குத்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்த கேள்விக்கு அது கொண்டு வருவது போல் தெரியவில்லை என்றும் காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்தார். சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்ற கேள்விக்கு ஒழிந்து விடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment