தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் போட்டியிட்ட டி.ஆர்.பாலு

ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் போட்டியிட்ட டி.ஆர்.பாலு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட டி.ஆர்.பாலுவை விமர்சித்து வீடியோ பதிவிட்ட இளைஞரின் தந்தை, தன்னை சொந்த கட்சி நிர்வாகி என்று கூட பாராமல் பேரூராட்சி தலைவியின் கணவரும் திமுக செயலாளருமான சதிஷ் என்பவர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் செல்லப்பெருமாள் நகரை சேர்ந்த திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன், ஜப்பானில் பணிபுரிவதோடு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் டி.ஆர்.பாலு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட அது தீயாய் பரவியது. இதனை அறியாத அவரது தந்தை ராமலிங்கம் டி.ஆர்.பாலுவுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
 

00 Comments

Leave a comment